Home Latest News Tamil அப்பாவாகப்போகும் ஹர்டிக் பாண்டியா

அப்பாவாகப்போகும் ஹர்டிக் பாண்டியா

401
0

அப்பாவாகப்போகும் ஹர்டிக் பாண்டியா. இந்த செய்தியை தனது காதலி நடாஷா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அனியின் ஆல்ரவுண்டர் என அழைக்கப்படுபவர் ஹர்டிக் பாண்டியா. இவர் சமீபத்த்தில் தனது காதலி கர்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அரிமா நம்பி திரைப்படத்தில் ஐட்டம் நடிகையாக ‘நானு உன்னில் பாதி’ என்ற பாடலில் நடித்தத்தன் மூலம் தமிழ் சினிமாவில் முகம் காட்டியவர் நடிகை நடாஷா.

பல ஹிந்தி படங்களின் பாடல்களில் நடித்து வருவதோடு மாடலிங் துறையிலும் இருந்துவருகிறார். ஹிந்தி பிக்பாஸ் 8-ல் இவர் பங்கேற்றிருந்தார்.

ஹர்டிக் பாண்டியாவின் காதலி நடாஷா செர்பிய நடிகை ஆவார். இவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஆன புகைப்படங்களை இந்த புத்தாண்டில் இவர் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அண்மையில் ஹர்டிக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாஷா கர்பமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதில் நானும் நட்டாஷாவும் சேர்ந்து ஒரு சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது இனி மேலும் சிறப்பானதாக அமைய உள்ளது. எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உறவை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் முன்னேற உள்ளோம் என அவர் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous article76 வயதில் இளமை ஊஞ்சலாடுகிறது
Next articleஅட! நம்ம லாஸ்லியாவா இது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here