நிலவின் ஒரு பகுதியின் விலை 25 லட்சம் (2.5 மில்லியன் டாலர்) என்ற மதிப்பில் ‘கிறிஸ்டிஸ்’ என்ற லண்டன் ஏல நிலையத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது.
லண்டன்: லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘கிறிஸ்டிஸ்’ ஏல நிறுவனம் உலகின் மிகப்பெரிய சந்திரனின் ஒரு பகுதியை இன்று, (வியாழன்) ஏல விற்பனைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
சந்திரனின் பாறை :
13.5 கிலோ எடை கொண்ட சந்திரனின் பாறை ஒன்று, சந்திரனின் மேற்பரப்பில் சிறு கோள் ஒன்று மோதியதாலோ அல்லது வாள்மீன்களுடன் மோதியதாலோ உடைந்து சஹாரா பாலைவனத்தில் விழுந்தது.
NWA12691 என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த துண்டு, பூமியில் கண்டெடுக்கப்பட்ட 5-வது பெரிய துண்டு ஆகும். பூமியில் இதுவரை 650 கிலோ எடையுள்ள சந்திரனின் பாறை துண்டுகள் உள்ளன.
“வேறு ஒரு உலகின் ஒரு பகுதியை உங்கள் கைகளில் வைத்திருக்கும் அனுபவம் என்பது என்றும் மறக்க முடியாத ஒன்று” என்று கிறிஸ்டிஸ்-ன் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்று துறையின் தலைவர் கூறியுள்ளார்.
NWA12691-வின் தன்மைகள் :
ஜேம்ஸ் ஹைஸ்லோப், கிறிஸ்டிஸ்-ன் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்று துறையின் தலைவராக உள்ள இவர், “இது உண்மையில் நிலவின் ஒரு துண்டு தான்.
இது கால்பந்தின் அளவை அல்லாது அதைவிட சற்று பெரியதாக உள்ளது. மனித தலையை விட பெரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல விண்கற்களைப் போலவே, இந்த சந்திர தூண்டும் சஹாராவில் யாரோ ஒருவருக்கு கிடைத்துள்ளது. சந்திரனிலிருந்து பூமிக்கு 240,000 மைல்கள் கடந்து வந்துள்ளது.
ஆய்வின் முடிவுகள் :
பின்னர் இது ஆராச்சி கூடத்தில் வைத்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் அப்பல்லோ விண்வெளி பயணத்தின்போது சந்திரனிலிருந்து பாறை ஒன்று கொண்டுவரப்பட்டது.
1960 மற்றும் 1970களில் அப்போல்லோ விண்கலம் சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள பாறையை விஞ்ஞானிகளுடன் கொண்டுவந்தது. பின்னர் பாறையின் வேதியியல் மற்றும் ஐசோடோபிக் கலவைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் வேறு சில விண்கற்களுடன் பொருந்துகின்றன என்றும் தெரிவித்துள்ளனர். விண்கற்கள் மிகவும் அரிதானவை. இவற்றில், ஆயிரத்தில் ஒன்று மட்டுமே சந்திரனில் இருந்து வருகிறது.
சிறப்பு வாய்ந்த பொருள் :
இதனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. “இது குறித்து இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகத்திலிருந்து, உலகளாவிய அளவில் பெரிய ஆர்வத்தை எதிர்பார்க்கிறோம்.
விண்வெளி அல்லது சந்திரனை குறித்து ஆராயும் ஆய்வில் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த கோப்பையாகவே பார்க்கப்படுகிறது”. என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சக்தி, அன்பு, நேரம் மற்றும் வளமை இவையனைத்தின் அடையாளமாக மனிதனின் வரலாறு உருவானதிலிருந்தே சந்திரன் மனிதனை பல்வேறு வகையில் கவர்ந்து வருகிறது.
பூமியின் ஒரே ஒரு இயற்கையான செயற்கைக்கோள் சந்திரன்தான். சந்திரனை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காண்போர் அனைவரையும் ஈர்ப்பதில் சந்திரனுக்கு சிறப்பான அழகு உண்டு.
மேலும் சில விண்கற்கள் விற்பனைக்கு :
கிறிஸ்டிஸ் மேலும் 13 விண்கற்களை ஏலத்திற்கு சேகரித்து வைத்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.4 மில்லியன் பவுண்டுகள் (13,09,74,760 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியோ இனி நிலவையும் விலை கொடுத்து வாங்க முடியும் என்ற நிலை வந்தே விட்டது.