கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ வெள்ளிக்கிழமை கொரோனா மற்றும் ஆம்பன் புயலுக்கு பிந்திய பாதிப்புகளில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் “தான் டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விலக வேண்டும் என தெரிவிக்கவில்லை” எனவும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து விலக வேண்டும்
“நாங்கள் கொரோனாவிலிருந்தும் மற்றும் ஆம்பன் புயலிருந்தும் மக்களை காப்பாற்ற போராடிவரும் நிலையில், சில எதிர்கட்சிகள் எங்களை பதவி விலக கூறவதால் மிகவும் வேதனை அடைந்தேன். நான் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து விலக வேண்டும் என எப்போதும் தெரிவிக்கவில்லை,” என உலக சுற்றுசூழல் தினத்தன்று நடந்த ஒரு விழாவில் மம்தா பானர்ஜீ தெரிவித்தார்.
நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம்
மேலும் அவர் தெரிவிக்கையில், “ இதுதான் அரசியல் பன்னும் நேரமா? கடந்த 3 மாதங்கள் இவர்கள் எங்கே இருந்தனர்? நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம்.” என கூறினார்
“வங்காளம் கொரோனாவையும் வெல்லும் மற்றும் எதிர்கட்சிகளின் சதியையும் வெல்லும்,” என மேலும் தெரிவித்தார்.