பார்வதி நாயர் விழிப்புணர்வு வீடியோ ஒன்று பதிவிட்டு அதன் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
இப்படத்தைத் தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதன் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளாலாம் என்பது குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார்.
பார்வதி நாயர் கொரோனா விழிப்புணர்வு
சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பார்வதி நாயர் பதிவிட்ட வீடியோவில், தினந்தோறும் எலுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
மருந்து மாத்திரைகள் மூலம் குணமாகாத சில காய்ச்சல் இந்த வைட்டமின் சி எடுத்துக் கொண்டால் உடனே குணமாகும்.
எலுமிச்சை மற்றும் தேன் தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். மேலும், ஸ்லிம்மாக, ஃபிட்டாக இருப்பதற்கும் இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
சாப்பாட்டில் மஞ்சள் பயன்படுத்த வேண்டும். இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒருவகை மருந்துதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, சூடா தண்ணீர் குடித்தால் நமக்கு எந்த வைரஸூம் வரவே வராது என்று பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
நல்ல பையனாக, பெண்ணாக அனைவருமே வீட்டிலேயே இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், 1117 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.