பி.எம் கேர்ஸ் நிதி 3,100 கோடி ரூபாய் யாருக்கு என்பது குறித்த விளக்க அறிக்கையை பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
புதுதில்லி: பி.எம் கேர்ஸ், கடந்த மார்ச் 27-ம் தேதி மத்திய அமைச்சரவையால், பிரதமர் திரு நரேந்திர மோடியை தலைவராகவும், மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை அறங்காவலர்களாகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.
பி.எம் கேர்ஸ் உருவாக்கப்பட்ட பின்னர், பல்வேறு தொழிற்துறையினர், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர் மற்றும் நடிகர்கள் என பலரும் இந்த நிதி திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
PM-CARES எனப்படும் இந்த பிரதமரின் குடிமக்களின் அவசர கால உதவி மற்றும் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 3,100 ரூபாய் தற்போது கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த 3,100 கோடி நிதியில் ரூபாய் 2000 கோடி வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்படும்.
1000 கோடி ரூபாய் வெளி மாநில தொழிலாளர் நலனுக்காகவும் ஒதுக்கப்படும். மீதமுள்ள 100 கோடி ரூபாய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கு ஒதுக்கப்படும்’.
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவ துவங்கியதும் இந்த PM-CARES என்பது துவக்கப்பட்டது. இது ஒரு அறக்கட்டளை போன்று செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
1948-ம் ஆண்டிலிருந்து பிரதமரின் தேசிய நிவாரண நிதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போர்த்து இந்த புதிய நிதி தொகுப்பிற்கு என்ன அவசியம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த புதிய நிதி அமைப்பால் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுவரும் நிதி குறைந்துவிடும் என பல்வேறு மாநி அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன.
மேலும் இந்த PM-CARES-ல் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்க்கு வரும் நிதியானது அரசால் தணிக்கை செய்யப்படாமல் தனியார் ஆடிட்டர்களிடம் ஒப்படைத்து தணிக்கை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது