பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு: இத்தனை அமைச்சர்களுக்குத் தொடர்பா?
தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கட்சியும் சிக்காத அளவிற்கு அதிமுக ஆட்சியில் பாலியல் குற்ற வழக்குகள் அதிகமாக வெளிவந்துள்ளது.
தோண்டத் தோண்ட பலரின் முகங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி விவகாரத்தில் இன்று தான் ஜாமீன் கிடைத்துள்ளது.
ஆளுநர் முதல் பல உயரதிகாரிகள் பெயர்கள் இந்த வழக்கில் அடிபட்டது. தற்பொழுது தமிழகத்தின் துணை சபாநாயகர், அவருடைய மகன்கள் பெயர்கள் முக்கியமாக அடிபட்டு உள்ளது.
யுத்தம் செய் படத்தில் வருது போன்ற ஒரு பெரிய நெட்வொர்க்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளது.
கீழ்மட்டத்தில் உதவிய சில நபர்கள் யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்து ரசித்த வீடியோக்களே இவர்கள் சிக்குவதற்கு காரணம்.
சிலர் மட்டும் இச்செயலில் ஈடுபடவில்லை. பல அரசியல் தலைவர்களுக்கு, ‘இளம் பெண்கள் கற்பு’ சப்ளை செய்யப்பட்டு உள்ளது.
பெண்களை மிரட்டுவதற்காக எடுக்கப்பட்ட அதே வீடியோவே அவர்களை கட்டிக்கொடுத்துள்ளது.
ஆனால் இன்னும் எத்தனை நகரங்களில் எத்தனை இளம்பெண்கள் சூறையாடப்பட்டு உள்ளனர்?
பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொன்னால் மட்டுமே தெரியவரும் இதுபோன்ற அரக்கர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கையில், உயர்நீதிமன்றம் மாநில அரசின் கையில். இவர்கள் கட்சியினர் சம்பந்தப்படும் வழக்குகள் மட்டும் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
நீதித்துறை சுதந்திரமாக இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே புலம்பித் தீர்த்துவிட்டனர். இப்படி ஒரு ஆட்சி நமக்குத் தேவை தானா?
கடந்த கால திமுக-காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாகிவிட்டது என இவர்களைத் தேர்ந்தெடுத்தால், இவர்கள் உழல்+பாலியல் என சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளனர்.