Home சினிமா கோலிவுட் திருமண தேதியை உறுதி செய்த ராணா!

திருமண தேதியை உறுதி செய்த ராணா!

391
0
Rana Daggubati Wedding Date

Rana Daggubati Wedding Date; திருமண தேதியை உறுதி செய்த ராணா! தனது திருமண தேதியை நடிகர் ராணா டகுபதி உறுதி செய்துள்ளார்.

மிஹீகா பஜாஜ் மற்றும் ராணா டகுபதி ஆகியோரது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கும், அவரது காதலியுமான மிஹீகா பஜாஜுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

அண்மையில், இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வரும் ஆகஸ்டு 8 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதை ராணா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையில் மிஹீகா வந்தது நல்ல தருணம். அவர்தான் எனக்கு சரியான ஜோடி. வரும் ஆகஸ்டு 8 ஆம் தேதி எங்களது திருமணம் நடக்க இருக்கிறது. அன்றைய தினம் எங்களது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleலாபம் டப்பிங் பணியில் விஜய் சேதுபதி: வெள்ளை தாடி மீசையுடன் வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleஆக்‌ஷனில் கலக்கிய சுழல் சூறாவளி ஹர்பஜன் சிங்: வைரலாகும் பிரண்ட்ஷிப் மூவி வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here