Home சினிமா கோலிவுட் சில்லுக்கருப்பட்டி: நானும் ஒரு காக்கா கடி கடிச்சிக்குறேன்!

சில்லுக்கருப்பட்டி: நானும் ஒரு காக்கா கடி கடிச்சிக்குறேன்!

406
0
சில்லுக்கருப்பட்டி காக்கா கடி

சில்லுக்கருப்பட்டி: நானும் ஒரு காக்கா கடி கடிச்சிக்குறேன்! சில்லுக்கருப்பட்டி படத்தில் வரும் காக்கா கடி பற்றிய என் பார்வை.

சில்லுக்கருப்பட்டி காக்கா கடி!

உரையாடல் என்பது வெறுமனே பேசிக்கொள்வது, பேசுவதை கேட்பது என்றல்லாமல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நம் உணர்வுகளை கம்யூனிக்கேட் செய்யும் விதமாக இருத்தல் என்பது மிக முக்கியம்.

அதுவும் இக்காலத்தில் பெறும்பாலான மக்களிடம் அப்படியொரு உரையாடல் நிகழ்வதே இல்லை. மொபைல், வாட்ஸப், ஃபேஸ்புக், டிவிட்டர் என கம்யூனிக்கேட் செய்ய செயலிகள் இருந்தும் இங்கு பலர் தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள்.

உணர்வுகளை கடத்தும் விதமான உரையாடல்களை அசைவுகளை அன்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு நான்கு கதைகளில் சொல்லிருக்கிறார் இயக்குனர் ஹலிதா அவர்கள். அதில் ஒரு கதைதான் காக்கா கடி.

காக்கா கடி – பகிர்தல் 

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட  குழந்தைகள் இருக்கும் ஒரு பொழுதில் ஒரே ஒரு சாக்லேட்தான் இருக்கிறது.

அப்படியொரு சமயத்தில் அங்கிருந்த குழந்தை ஒன்று “நா.. காக்கா கடி கடிச்சுட்டு கொடுக்குறேன்” என சொல்லி சாக்லேட்டை கடிக்க தொடங்க.. அதன்பின் அங்கிருந்த அனைத்து குழந்தைகளும் ‘காக்கா கடி’ கடித்தே அந்த ஒரே ஒரு சாக்லேட்டை ருசித்து சாப்பிட்டனர்.

இதில் வெறும் பகிர்தல் மட்டுமில்லை அதன்பின் அனைவரும் சாப்பிட வேண்டுமென்ற அன்பு இருக்கிறது இனிப்பாக !

முகிலன் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தவுடன் அவனின் முகக்கலை மாறும் காட்சியில் நம் மனதில் நெருடல் ஆரம்பிக்கிறது.

கல்யாணம் செய்யலாம் என்றிருந்த பெண் “எப்படி இப்படியொரு பையனுக்கு பெண்தருவாங்க” என்ற சாயலில் கேட்ட கேள்விக்கு அவன் உடையும்போது பார்க்கும் நாமும் உடைய ஆரம்பிக்கிறோம்.

இப்படி உடைந்து கொண்டிருந்த முகிலனுக்கு மட்டுமல்ல படம்பார்த்த நமக்கும் ஒரு சுவையுடைய சாக்லேட் போல வந்த பெண்தான் மது.

முகிலனின் மீம்ஸ்களைத் தேடி ரசிக்கும்போதே அவளை நாம் ரசிக்கத்தொடங்கியிருப்போம். அவன் தூங்கட்டும் என்பதற்காக இன்னும் சிறிது தூரம் காரை ஓட்டச்சொல்லும்போது அவளைக் கண்டு பூரிக்க தொடங்கியிருப்போம்.

எதார்த்தத்தின் உச்சக்கட்டம் 

ஒரு காருக்குள் அவ்வளவு அழகான சகஜமான உரையாடல்கள் காக்கா கடி கதையில் வாய்த்திருக்கிறது. இருவருக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் ஒருபோதும் போலித்தன்மையாகவோ எதார்த்தம் மீறியதாகவோ தோன்றவே இல்லை.

முகிலன் தனக்கு இருக்கும் நோயை மதுவிடம் கூறுவதாகட்டும் அதற்கு அவள் கூறும் மறுமொழியாகட்டும் அனைத்துமே சகஜமான வார்த்தைகள்.

பாசிடிவ் ஃபார்முலா 

மதுவும் முகிலுனும் முதன் முதலாக பேசிக்கொள்ளும் காட்சியில் “மீம்ஸ்லாம் ஒரு மேட்டராங்க ” என முகிலன் சொல்ல, அதற்கு பதில்மொழியாக “கம் ஆன் இது ஒரு ரெவல்யூஷன். இப்போ ஹியூமர் காலமிஸ்ட், கார்ட்டூனிஸ்ட் அந்த மாதிரி இது ஒரு க்ரியேட்டிவிட்டி ஃபார்ம்” என்று சொல்லிக்கொண்டே மது  தரும் ரியாக்ஷன் அழகு.

மேலும் இந்த உரையாடல் ‘மீம் க்ரியேட்டர்ஸ்’ அனைவருக்கும் ஒரு புன்னகையை நிச்சயமாக பரிசளித்திருக்கும். மேலும் காதலுக்காக மது எடுத்துக்காட்டாக
சொல்லும் கார்னிட்டோ ஐஸ்க்ரீம் கான்செப்ட் எவ்வளவு உண்மை.

“கறை நல்லது ..It’s ok to be sad !
No more tears !
Just kick it !
ஒரு பால்னாலும் அடிச்சு நவுத்துங்க !”

போன்றவைகளெல்லாம் ‘பாசிட்டிவ்வைப்’ கொடுத்து பார்ப்பவர்களையும் உற்சாகப்படுத்தி தட்டிக்கொடுக்கிறது வசனங்கள்.

மது தனக்கு இதுவரை வந்த லவ் புரோபசல்களை காட்டும்போதாகட்டும், தனக்கு தினம் பரிசுகளை தரும் அந்த காகத்தை அறிமுகப்படுத்தும் காட்சியாகட்டும்
முகிலன் வேகமாக பேசும் அந்த தோரணை அந்த வேகத்திலும் நச்சென்று இருக்கும் வசனங்களெல்லாம் மழையின் போது தேநீர் அருந்தும் சுவையை தரவல்லது.

கதையின் இறுதிக்காட்சிகளில் முகிலன் மருத்துவமனையில் இருக்கும்போது மது தந்து அனுப்புகிற பொருட்கள் ஒவ்வொன்றும் எதுமற்று இருப்பவனுக்கு  நம்பிக்கையை தருகிறது.

மதுவும் தன்னிருப்பை அவனுக்கு தெரிவிக்கிறாள். மது தன் காதலை வெளிப்படுத்துவதும் உலகமே ஒரு உருண்டைலதானே இருக்கு என்று சொல்வதும் காக்கா கடியின் இறுதிச்சுவை.

வசனஙக்ளை எழுதியதற்காகவே ஹலிதா அவர்களுக்கும் பின்னனி இசையில் குறிப்பாக ஹம்மிங் செய்ததற்காக பிரதீப் குமார் அவர்களுக்கும் தினக்காட்சிகளை அப்படியே காட்டிய ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணணுக்கும் மீப்பெறும் நன்றிகளை தெரிவித்தாக வேண்டியதிருக்கிறது.

பகிர்தல் நல்லது 

முகிலன் தன்னைப்பற்றி மதுவிடம் சொன்னப்போதுதான் அவனுக்கான கதவு திறந்தது என்று சொல்லலாம். ஆம்! முடிந்தவரை நமக்குள் இருக்கும் வலிகளை
விருப்பத்துக்குரியவர்களிடம் வெளிப்படையாக பகிர்வோம்.

நம்மிடம் மற்றவர்கள் அவர்களின் வலியைக் கூறுமளவிற்கு நாம், அவர்களிடத்தில் அன்பு செலுத்துவோம். சக உயிர்களிடம் அன்பை வெளிப்படுத்தி நம் வாழ்வை வாழ முயற்ச்சிப்போம் .

நம் வலியாகட்டும் அன்பாகட்டும் வெளியில் சொல்லுவோம்! மது எனும் அழகி முகிலனிடம் சொல்வதைப்போன்றதுதான். “வெக்கப்பட்றது அவமானப்பட்றது இதுலாம் வேணாம்” Be sportive!

அழுகையையும், அமைதியையும் அன்பின் உரையாடல்களோடும் தினம் நாம் காண்கிற சராசரி காட்சிகளுடனும் காட்டிய இந்த காக்கா கடி படம் முடிந்த பின்பும் இனிக்கிறது, இனித்துக்கொண்டிருக்கிறது.

Previous articleதை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்?
Next articleAshan Birthday Celebration: உண்மையில் இவர் தெலுங்கு பெண்ணா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here