Home நிகழ்வுகள் தமிழகம் சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு; கவலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள்

சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு; கவலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள்

1467
0
சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு; கவலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடங்களில் பரவல் அதிகமாம்.

இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். தெற்கு ஆசியாவில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.

இதில் கட்டுமானப்பணி மற்றும் பராமரிப்பு பணிகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். அதில் பலருக்கு கொரோனா தொற்று ஆகியுள்ளது.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 940-க்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதனால் விடுதியில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Previous article19/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleஊரடங்கால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, கலங்கும் பெண்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here