Sivakarthikeyan; அப்பா, மகன் கதைக்கு போட்டி: அவமானப்பட்ட சிவகார்த்திகேயன்! நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த அல வைகுந்தபுரமுலோ படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு சிவகார்த்திகேயன் போட்டி போட்டு கடைசில அவமானப்பட்டுள்ளார்.
அப்பா, மகன் கதையை மையப்படுத்திய அல வைகுந்தபுரமுலோ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற நினைத்த சிவகார்த்திகேயனுக்கு கடைசியில் அவமானம் தான் மிஞ்சியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் என்பது மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். விரைவில், இயக்குநர் அவதாரம் கூட எடுக்கலாம்.
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த படம் அல வைகுந்தபுரமுலோ.
அப்பா, மகன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
அதற்காக இந்தப் படத்தை கைப்பற்றும் முயற்சியில், மோகன் ராஜா, விஜய் சந்தர் ஆகியோர் இறங்கியுள்ளனர்.
படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி மோகன் ராஜா தனது தம்பியை வைத்து ஹிட் கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளாராம்.
இதே போன்று, வாலு படத்தை கொடுத்த விஜய் சந்தர் இந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்து சிம்புவிற்கும், தனக்கும் ஒரு ஹிட் கொடுக்க ஆசைப்படுகிறாராம்.
இவர்களது வரிசையில், சிவகார்த்திகேயனும், இந்தப் படத்திற்காக போட்டி போட்டுள்ளார். ஆனால், அல்லு அர்ஜூன் தரப்பில் சிவகார்த்திகேயனை ரீமேக் பற்றி பேச கூட வரவேண்டாம் என்று தெரிவித்து விட்டார்களாம்.