SmartCop App; ஊரடங்கை மீறி வெளியில் சுத்துனா இனிமே சம்பவம் தான், ஸ்மார்ட் காப் ஆஃப் மூலம் ஊரடங்கை கடைபிடிக்காமல் சுத்துவோரை போலீஸ் எளிதாக பிடிக்க இயலும்.
கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை கடைபிடிக்காமல் மக்கள் வெளியே செல்கின்றனர்.
அவர்களை கட்டுபடுத்த இயலாமல் போலீஸ் திணறி வருகின்றனர். இதற்கு போலீஸ்க்கு உதவுவதற்காக ஸ்மார்ட் காப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
SmartCop App
ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், இந்தச் செயலிமூலம் தேவையில்லால் வெளியில் சுற்றுபவர்களின் விவரங்களை சேகரிக்க முடியும்.
பின்னர் ஊரடங்கை மீறுவோரின் பெயர், கைப்பேசி எண், வாகனப் பதிவெண், ஓட்டுநர் உரிம எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்டவற்றை இந்தச் செயலியில் பதிவுசெய்ய முடியும்.
ஜிபிஎஸ் மூலம் அவர்கள் இருக்கும் நிகழ்விடத்தை கண்டறிவதுடன் சம்பந்தபட்டவரின் புகைப்படம், வாகனத்தின் புகைப்படத்தை செயலி மூலமே எடுத்து கொள்ளலாம்.
சிக்குவோரின் ஃபோன் நம்பர் அல்லது பைக் நம்பர் ஆகியவை பயன்படுத்தி அவர்களின் முந்தைய தவறுகள் குற்றங்களை கண்டறிய இயலும்.
இந்த செயலியை நெல்லை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வெளியில் வருவோரை குறைக்க இயலும் காவல்துறை நம்புகிறது.