Home Latest News Tamil இரு கைகளை உயர்த்திய விஜய்: அதன் பிறகு நடந்தது என்ன?

இரு கைகளை உயர்த்திய விஜய்: அதன் பிறகு நடந்தது என்ன?

511
0
இரு கைகளை

இரு கைகளை உயர்த்திய விஜய்: அதன் பிறகு நடந்தது என்ன?

விஜய்63 அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக இணையும் படம். சர்கார் படத்திற்கு முன்பே அட்லீயுடன் இணையும் முடிவில் இருந்தார் விஜய்.

அட்லீயும் “ஆளப்போறான் தமிழன்” என டைட்டில் வைத்து போஸ்டர் வெளியிட்டார். திடீரென முடிவை மாற்றிக்கொண்ட விஜய், முருகதாஸுடன் கூட்டணி சேர்ந்தார்.

சர்கார் பட வெற்றியை அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் பூஜை போடப்பட்டது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நயன்தாரா, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை.

தற்பொழுது, சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.  சென்னை பின்னி மில்லில் இதற்காக செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

விஜய் தனக்காக காத்திருந்த ரசிகர்களைப் பார்த்து இரு கைகளை உயர்த்துகிறார். ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் விஜய்க்கு கையசைத்து வழியனுப்பும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Previous articleவிஜய்யின் உண்மை முகம்: உண்மை சம்பவத்தைப் புட்டு புட்டு வைத்த நடிகர்!
Next article14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here