சென்னை: தமிழ்நாட்டில் சனிக்கிழமை புதிதாக 49 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 1,372 ஆக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்லனர்.
பல்வேறு மருந்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,884.
சென்னை, தொடர்ந்து 235 கொரோனா பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது அதை தொடர்ந்து கோயம்புத்தூர் 128 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் மற்றும் திருப்பூர் 108 பாதிப்புகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஈரோட்டில் 70 கொரோனா பாதிப்புகள் உள்ளன.
கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும் கேரளா!
அண்டை மாநிலமான கேரளா சரியான விதத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. 4 புதிய கொரோனா பாதிப்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மேலும் இதில் 3 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிகிறது. இதில் 3 பாதிப்புகள் கண்ணூர் மாவட்டத்திலும், ஒன்று கோழிக்கோடு மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 399 ஆகவும் இதில் 140 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் 7,190 பேர் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும்
இதில் 6,686 பேர் வீட்டில் வைத்து கண்கானிக்கபடுவதாகவும், 504 பேர் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிரது.
இந்த நிலையில்தான் திங்கள்கிழமை முதல் முதற்கட்டமாக கேரளாவின் 7 மாவட்டங்களில் உணவகங்களை திறக்க மற்றும் குறைந்த அளவிலான வாகன போக்குவரத்தை துவங்களாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 21 நாட்களுக்கான தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கும் நிலையில், கேரள மாநில அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கும் உத்தேச திட்டத்தில் கேரளாவை சிகப்பு, ஆரஞ்ச் A, ஆரஞ்ச் B மற்றும் பச்சை மண்டலங்களால பிரிக்க போவதாகவும் இதில் சிகப்பு மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 நாட்களில் கேரளத்தின் கொரோனா பாதிப்பு ஒருமையில் உள்ளதாலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை சீராக உள்ளதாலும் மத்திய அரசு இந்த உத்தேச திட்டத்தை ஏற்றுள்ளது.
மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில் பொதுமக்களின் மகத்தான ஒத்துழைப்பே இத்தகைய மீட்சியை கேரளா சந்தித்திருப்பதாகவும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.