World Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம். உலக சிரிப்பு நாள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.
நம் அன்றாட வாழ்க்கையில் சிரிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை நாம் அறிந்துகொள்வதற்கான தினமாக இந்த நாள் அமைகிறது.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பெரியோர் சொல்லி நாம் கேட்டுள்ளோம். சிரிப்பு நமது உடலில் உளவியல் ரீதியாக பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.
உலக சிரிப்பு நாள் முதன் முதலாக 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டது. வருடம் தோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது.
இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார்.
இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் Laughter Yoga Moveement தொடங்கியவர்.