Home Latest News Tamil மச்சம் இருக்கா? அப்போ நீங்க அப்படிப்பட்டவர் தான்!

மச்சம் இருக்கா? அப்போ நீங்க அப்படிப்பட்டவர் தான்!

0
979
மச்சம் இருக்கா?

மச்சம் இருக்கா? அப்போ நீங்க எப்படிப்பட்டவர் என்று ஜோதிடம் மூலம் மச்ச பலன்களை வைத்து தெரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் இருந்தே உடலில் மச்சம் எங்கு இருந்தால் என்ன பலன் என முன்னோர்கள் கணித்து வந்துள்ளனர். அப்படி மச்சத்தை வைத்து ‘ஜோதிடம்’ ஒருவரின் குணத்தை புட்டு புட்டு வைக்கிறது.

மச்சத்தின் பலன்களும், அவர்களின் குணங்களும்:

மூக்கில் மச்சம் இருக்கா?

முனி மூக்கில் மச்சம் இருந்தால் அனைத்து வலம் பெற்று வளமுடன் வாழ்வார்கள். மூக்கின் வலப்பக்கத்தில் இருந்தால் நினைத்ததை அடையாமல் விடமாட்டார்கள்.

மூக்கின் இடப்பக்கத்தில் இருந்தால் யாரையும் நம்பமாட்டார்கள். விலை மாதுவைத் தேடி அழைவார்கள்.

காது 

இரு காதில் மச்சம் உள்ளவர்கள் பேச்சாளர்கள், வசீகரத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். வலது பக்க காதில் மட்டும் இருந்தால் அவர்களுக்குத் தண்ணீரில் கண்டம். இடது பக்கம் இருந்தால் பெண்களால் கண்டம்.

புருவம்

புருவத்தின் நடுவில் மச்சம் இருந்தால் திடமான ஆயுள் உடையவர்கள் என்று அர்த்தம். வலப்புருவதில் இருந்தால் மனைவி அதிர்ஷ்டசாலியாக அமைவார்.

கன்னம்-நெற்றி

நெற்றி வலது ஓரத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத சங்கடங்கள் நேரிடும். இடதுபுறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்வு ஏற்றம் இறுக்கமாக அமையும்.

கழுத்து

தொண்டை குழியில் மச்சம் இருந்தால் பணக்கார வரன் அமையும். கழுத்தின் வலப்புறம் இருந்தால் பங்காளிகளுடன் நல்ல உறவு நீடிக்கும்.

கழுத்தின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால், பெரிய அளவில் துன்பம் இல்லாமல் வாழ்வார்கள்.

மார்பு

இடதுபுற மார்பில் மச்சம் இருந்தால் பிறப்பதெல்லாம் ஆண்குழந்தையாகத் தான் இருக்கும். வலது மார்பில் மச்சம் இருந்தால் பெண்குழந்தைகள் தான் அதிகம் பிறக்கும்.

வயிறு

வயிற்றில் மச்சம் இருந்தாலே அவர்கள் பொறமை பிடித்தவர்களாக இருப்பார்கள். தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

தோள்-கை

வலது தோளில் மச்சம் இருந்தால் சின்ன விசயத்தை கூட ஊதி பெரிது படுத்துவர். வலது உள்ளங்கையில் மச்சமிருந்தால் அவர்கள் நல்ல நட்புடன் பழகுவர்.

தொடை

தொடையில் மச்சம் இருப்பவர்கள் ரசனை மிகுந்தவராக இருப்பார்கள். எதையுமே வித்தியாசமான கோணத்தில் அணுகுவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here