Home Latest News Tamil தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம் – கலோரி 1

தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம் – கலோரி 1

0
864
தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம்

தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம். தண்ணீர் அருந்துவதால் தொப்பை பெருத்துக்கொண்டே போவது பற்றித் தெரியுமா?

தொப்பை எதனால் வருகின்றது?

ஒருவர் வேலை செய்யாமல் இருப்பதால் தொப்பை வருகின்றது என சொல்வது மிகப்பெரிய தவறு. ஒருவர் வேலை செய்யாமல் இருப்பது மட்டுமே காரணம் அல்ல.

வயலில் இறங்கி கடுமையாக  வேலை செய்பவர்களுக்கு கூடத் தொப்பை உள்ளது. கட்டுமானத் தொழிலாளிகள் பலருக்கும் தொப்பை உள்ளது. கடினமாக வேலை செய்தாலும் தொப்பை வரும்.

தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், நாம் உடலுக்குத் தேவையான கலோரியை விட அதிகமான கலோரியை உள்ளே செலுத்துவது தான். கலோரி என்பதன் தமிழ் பெயர் கனலி.

கலோரி என்றால் என்ன?

ஆரம்ப காலங்களில் வெப்பம் மற்றும் ஆற்றலை அளக்க கலோரி என்ற அலகு பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது ஜூல் என்னும் அலகால் வெப்பம் அளவிடப்படுகிறது.

உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றலை அளக்க மட்டுமே கலோரி அல்லது கனலி என்ற அலகு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

7,700 கலோரி ஒரு கிலோ உடல் எடைக்குச் சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. சிலர் 9,000 அல்லது 10,000 கலோரி ஒரு கிலோ எடைக்குச் சமம் எனக்கூறியுள்ளனர். இது உடல் பருமனுக்கு ஏற்றவாறு மாறும்.

ஒரு மனிதனுக்குத் தேவையான கலோரி

50 கிலோ எடையுள்ள மனிதன் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால், அவனுக்கு ஒரு நாளைக்கு 1700 கலோரி வெப்பம் தேவைப்படும்.  அதே நபர், கடினமாக வேலை செய்தால் 6,500 கலோரி வெப்ப ஆற்றல் தேவைப்படும்.

உடலுக்குத் தேவையான ஆற்றல் என்பது வயதைப் பொருத்தும், உடல் பருமனை பொருத்தும் மாறுபடும். ஒருவர் தனக்குத் தேவையான அளவை விட அதிகம் சாப்பிடுவது உடல் பருமன் அதிகரிக்கும்.

ஒருவர் தனக்குத் தேவையான அளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும். இதற்கு தண்ணீர் ஒருவகைக் காரணம். எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் ஒருவகைக் காரணம்.

அது ஏன், எப்படி என அடுத்த பாகத்தில் பார்ப்போம். கோழி இறைச்சியில் எவ்வளவு கலோரி உள்ளது? பாலில் எவ்வளவு கலோரி உள்ளது?

மேலும், நாம் அன்றாடம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது? எந்த வகை உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும்? என அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

அதற்குள் நடக்கும் மர்மம் – கலோரி 2

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here