கேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று 150 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாநிலமாக கேரளா மாறியிருந்த நிலையில் நேற்று மீண்டும் 150 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.
கேரளாவில் நேற்று பதிவான புதிய 150 கொரோனா தொற்றுகளுடன் சேர்த்து இம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,876 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பாதிப்பு அடைந்தவர்களில் 91 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 48 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 11 பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மாநிலத்தில் அதிகபட்சமாக பாலக்காட்டில் புதிதாக 23 பேருக்கும், ஆலப்பழாவில் 21 பேருக்கும், கோட்டயத்தில் 18 பேருக்கும் கொல்லத்தில் 16 பேருக்கும் கன்னூரில் 13 பேருக்கும்
எர்ணாகுளத்தில் 9 பேருக்கும், திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் 14 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை பாலக்காட்டில் அதிகபட்சமாக 237 பேருக்கும், மலப்புரத்தில் 191 பேருக்கும்,
கொல்லத்தில் 183 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 1,63,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 2.397 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.