சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் மோடியையும் குறிவைத்து வெறுப்புனர்ச்சியை தூண்டும் வகையில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது, இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு சம்மந்தபட்டு உள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
ஆய்வு அறிக்கை
புதன் கிழமை அரசிடம் தெரிவிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில், சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிரான மனக் கிளர்ச்சியை தூண்டும் வகையில் பதிவுகள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பரப்பப்பட்டு வருவதாகவும்,” இதில் இந்தியாவில் இஸ்லாமோஃபோபியா உள்ளது போல் சித்தரிக்க படுவதாகவும்”, கூறப்பட்டு இருந்தது.
மேலும் இதில், இந்தியா மற்றும் அதன் வளைகுடா நட்பு நாடுகளிக்கிடையே பகை உணர்வை தூண்டும் வகையில் பதிவுகள் உள்ளதெனவும், பிரதமர் மோடி தற்போது மத்திய கிழக்கு நாடுகளிக்கிடையே நெருக்கத்தை காட்டிவரும் வேலையில் பாகிஸ்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக கூறப்பட்டு இருந்தது.
கடந்த வருடமும் வதந்தி பரவியது
பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் பாராளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான சட்டம் நிறைவேற்றும் பொழுதும் இதைப்போன்றே அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாகவும்
ஆனால் பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் தோல்வியில் தான் முடிந்தன என அரசு அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பு ISI தொடர்பு
“இத்தகைய செயல்களில் குறிப்பாக பார்க்க வேண்டியது, வளைகுடா நாடுகளில் இருக்கும் பிரபலமான நபர்களை இது போன்ற அவதூறுகளை சமூக வளைதளங்களில் பரப்ப பயன்படுத்தப்படுவதாகவும் இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI தொடர்பு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும்”, மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்
செவ்வாய் கிழமை பாகிஸ்தானில் “ ShameOnModi” என்ற ஹேஷ்டேகும், அதற்கு முந்தய நாள் “ChaosInIndia”, என்ற ஹேஷ்டேகும் பரப்பப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த அறிக்கையில் இது போன்ற அவதூறுகள் பரப்புபவர்கள் பகரீன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற இடங்களில் இருந்து இத்தகைய அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.