விசாகப்பட்டிணம்: செவ்வாய் கிழமை காலை ‘பாராவாட’ என்னும் இடத்திற்கு அருகில் உள்ள சைனார் லைப் சைன்ஸஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பென்சீமிடசோல்(benzimidazole) எனப்படும் வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து இருவர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டனர்.
பென்சீமிடசோல் வாயுவை 6 பேர் சுவாசித்துள்ளனர்
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை 30 பணியாளர்கள் அங்கு வேலை செய்து வந்துள்ளனர். அபோது அங்கு வெளியேரிய பென்சீமிடசோல் வாயுவை 6 பேர் சுவாசித்துள்ளனர்.
மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
இறந்தவர்களின் பெயர்கள் நரேந்திரா மற்றும் கவுரி சங்கர் என தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காரணம் தெரியவில்லை
வாயு கசிவு ஏற்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருமாதத்திற்கு முன் ஏற்பட்ட ஸ்டிரீன் வாயு கசிவில் 12 பேர் இறந்தனர்
ஏற்கனவே விசாகப்பட்டிணத்தில் உள்ள எள்.ஜீ. பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் ஒருமாதத்திற்கு முன் ஏற்பட்ட ஸ்டிரீன் வாயு கசிவில் 12 பேர் இறந்தனர் மற்றும் 500 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மீண்டும் அது போன்ற வாயு கசிவால் மக்களிடையே அதிர்ச்சி நிலவுகிறது.