Home அரசியல் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சரத் பவார் சந்திப்பு

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சரத் பவார் சந்திப்பு

உத்தவ் தாக்கரே

மும்பை: மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் நடந்த சந்திப்பில் மராட்டிய அரசு வலுவாக உள்ளதாக சிவ சேனாவின் மூத்த தலைவர் சஞ்செய் ராஉட் செவ்வாய் கிழமை தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்பு

இரு தலைவர்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்த்தாக தெரிகிறது.

திங்கள் காலை மாநில ஆளுநருடனான தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சந்திப்பிற்கு பிறகு தாக்கரே மற்றும் பவார் ஆகியவர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.

மராட்டியத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவரான சரத் பவார் ஆளுநர் கோஷ்யாரி மராட்டியத்தின் நிர்வாகத்தில் தலையிடுவதாக பகிரங்க அறிவிப்பு விடுத்திருந்தார்.

பா.ஜ.க ஆளுநரிடம் புகார்

சமீபத்தில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ், தாக்கரே அரசு கொரோனா பிரச்சனையை கையாள்வதில் தோல்வி அடைந்து விட்டதாக ஆளுநரிடம் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

பா.ஜ.க மராட்டியத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here