உலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா முன்னேறியுள்ளது. இதுவரையில் 5-ம் இடத்தில் இருந்துவந்த நிலையில் தற்போது பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா: உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து அதிகப்படியான என் ணிக்கைகளை பதிவுசெய்துவரும் நிலையில் தற்போது 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கியது covid-19 எனப்படும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.
சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது.
இவர்களில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் 423819 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசிலில் 8 லட்சம் பேரும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது நான்காம் இடத்தில் இருந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,98,283 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அதிகப்படியாக மஹாராஷ்டிராவில் 94041 பேரும் தமிழ்நாட்டில் 36841 பேரும் டெல்லியில் 32810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.