பாரத் பெட்ரோலிய நிறுவனம் விற்க காரணம் என்ன?
பாரத் பெட்ரோல் பங்க் இந்தியா முழுவதும் மெட்ரோ சிட்டிகளில் இருந்து சிறிய கிராமங்கள் வரை இயங்கி லாபம் ஈட்டி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,051.43 கோடி ஈட்டியது. சென்ற ஆண்டுடன் இதை ஒப்புடுகையில் இது மூன்று மடங்கு அதிகம்.
பாரத் பெட்ரோல் நிறுவனத்தின் பங்குகளில் 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதை வாங்குவோருக்கு குறைந்தது 73ஆயிரம் கோடி சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.