ஹைதராபாத்: மேதக் மாவட்டத்தில் உள்ள இளைஞர் உயிருடன் இருந்த உடும்பை தீயில் சுட்ட நேரலை காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
காணொளியில் இருந்தவர் 20 வயதுடைய இளைஞர் ஆவர். வனப்பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி உடும்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. “உடும்பை விற்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்களுக்கு 3 முதல் 7 வருடம் சிறை தண்டனை,” என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
பாலின உணர்ச்சியை தூண்டும் என கருதி வேட்டையாடப்படும் உடும்பு
சில நாடுகளில் ஊர்வன வகையை சார்ந்த இந்த உடும்பு மருத்துவ காரணங்களுக்காகவும், பாலின உணர்ச்சியை தூண்டும் மாமிசமாகவும் கருதப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
வனத்துறையினர்க்கு உதவி புரிய பொது மக்களிடம் வேண்டுகோள்
பொது மக்களிடம் வன உயிர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டு, வனத்துறையினர்க்கு உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.