காலாவதியாகும் காங்கிரஸ் – அதிருப்தியில் தொண்டர்கள் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் நேற்று வீச தொடங்கிய அரசியல் புயல் இன்றும் தொடர்கிறது .
ஜோதிராதித்ய சிந்தியா:
ஒரு பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகினார் .
இன்று மதியம் அவர் மத்தியில் ஆளும் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது .தற்பொழுது வரை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 எம் எல் எ க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் .
மேலும் பலர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் பிரபலமான இளம் தலைவரான சிந்தியா குவாலியர் அரச குடும்பத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
காங்கிரஸ் கட்சி வெற்றி:
சிறு வயது முதலே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார் கடந்த சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அரசமைத்ததில் இருந்தே முதல்வர் கமல்நாத்துக்கும் சிந்தியாவுக்கும் பனிப்போர் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில்தான் நேற்று காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்திக்கு தனது ராஜினாமா கடிதம் நேற்று அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு:
இருப்பினும் சிந்தியாவுடன் மேலும் பல இளம் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய வண்ணம் உள்ளதால் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது .
அதன்படி ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ரஃபின் சிங்க், மிலிந் தேவரா ,ஜிதின் பிரசாத ,ஹரியானா குல்தீப் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா போன்றோர் .
பாஜகவில் இணைய முடிவு:
மார்ச் 12 இல் சிந்தியா முறைப்படி பாஜகவில் இணைய உள்ளார் என்றும் 13 தேதி மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .
சிந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அவரை விரோதி என்று காங்கிரஸ் தொண்டர்கள் வசை பாடி வருகின்றனர்.
நாடாளுமன்றம் முடக்கம் :
குவாலியர் இளவரசர் சிந்தியாவின் நடவடிக்கையால் நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
காங்கிரஸ் குற்றசாட்டு:
முன்னதாக கமல்நாத் தலைமையிலான மாநில அரசை கலைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
230 இடங்கள் கொண்ட மத்திய பிரதேச சட்ட பேரவையில் இரு உறுப்பினர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர் அதனை அடுத்து 228 உறுப்பினர்கள் தற்பொழுது உள்ளனர்.
எனவே அறுதிபெருமபான்மை எண்ணிக்கையான 114 இல் பாஜக தன்வசம் 107 உறுப்பினர்களையும் காங்கிரஸ் 114 உறுப்பினர்களையும் வைத்திருந்தது.
சிந்தியாவின் புரட்சியால் தற்பொழுது வரை 22 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் அதனை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 92 ஆக குறைய கூடும் என்பதால் மத்திய பிரதேச அரசு எந்நேரமும் கவிழும் என்பதால் தேசிய அளவில் பரபரப்பு காணப்படுகிறது.
ஷ்பாங்கினி ராஜே:
இதனிடையே சிந்தியாவின் இந்த புரட்சிக்கு பின்னணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வதேதர தொகுதியில் போட்டியிட்ட போது முன்மொழிந்த ஷ்பாங்கினி ராஜேதான் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அண்மைய காலமாக காலாவதியாகும் காங்கிரஸ் தனது செயல் பாடுகளால் மிகுந்த இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.