Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா

0
312
இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இது நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவிலான அதிகப்படியான எண்ணிக்கையாகும்.

இதுவரையிலான கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 7000-ஐ கடந்ததில்லை. இதுவே முதல்முறை ஆகும். மேலும் 175 பேர் நேற்று நோய் தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் 89,987 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 71,105 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பலி எண்ணிக்கை 175 பதிவானதை அடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 4,706 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே சீனாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் என்னும் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இன்று உலகம் முழுமையாக அது பரவி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

சீனாவில் இந்த நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை இந்தியா முறியடித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா தற்போது 9-ஆவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் 10-ம் இடத்திலிருந்து இந்தியா 9-ம் இடத்திற்கு முண்ணேறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here