புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா உலக யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் மற்றும் யோகா என்பது உலக மனிதநேயத்திற்கு இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த பரிசு என தெரிவித்தார்.
யோகா ஒரு சமநிலை படுத்தும் ஊடகம்
மேலும் அவர் தெரிவிக்கையில், யோகா என்பது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டும் அல்லாது மனம் மற்றும் உடல், வேலை மற்றும் எண்ணங்கள், மேலும் மனிதர்கள் மற்றும் இயற்கை ஆகியவற்றை சமநிலை படுத்தும் ஊடகமாக இருக்கிறது என தெரிவித்தார்.
மனிதநேயத்திற்கு இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த பரிசு
“யோகா என்பது ஒட்டு மொத்த மனிதநேயத்திற்கு இந்தியா கொடுத்த தனித்துவம் வாய்ந்த பரிசு. உலகம் தற்போது யோகாவை தத்தெடுத்துள்ளது, பிரதமர் மோடியின் அயராத உழைப்பால் உலகம் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
மேலும் யோகாவை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.