Home நிகழ்வுகள் இந்தியா சிறுமிக்கு பாலியல் தொல்லை: பானுப்பிரியாவை கைதுசெய்ய பரிந்துரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பானுப்பிரியாவை கைதுசெய்ய பரிந்துரை

0
738
சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பானுப்பிரியாவை கைதுசெய்ய பரிந்துரை

நடிகை பானுப்பிரியா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ஆந்திர ஊடங்களில் பற்றி எரிகிறது.

ஆனால், நடிகை பானுப்பிரியா தமிழ்நாட்டிலேயே பதுங்கிவிட்டார். 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வேலைக்கு வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.

இதனால், நடிகை பானுப்ரியா மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த பிரபாவதி, சமல்கோட்டா காவல்நிலையத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமை செய்வதாக புகார் அளித்தார்.

செல்போனில் கூட பேசவிடாமல் கொடுமை செய்கின்றனர். போலீசிடம் சென்றால் திருடியதாக புகார் செய்வோம் என மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்து பானுப்பிரியாவிடம் விசாரணை செய்தனர்.

நேற்று, குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அதிகாரிகள், சிறுமியை மீட்டு  தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் வாங்கினர்.

இந்த விசாரணையின் போது, சிறுமி பதினான்கு வயதிற்கு உட்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டத்தின் கீழ் பானுப்பிரியாவை கைது செய்ய வேண்டும் என ஆந்திர போலீசாருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here