மும்பை: பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை நடித்து புகழ் பெற்ற நடிகர் இர்பான் கான் தனது 53 ஆவது வயதில் இன்று காலமானார்.
செவ்வாயன்று மும்பையில் உள்ள கோகிலாபென்(kokilaben) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பெருங்குடல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார், புதன்(இன்று) காலை அவரது உயிர் பிரிந்தது என அறிவிக்கப்பட்டது.
உலக அளவில் அறியப்பட்டவர்
“இர்பான் அனைவராலும் விரும்பப்பட்டவர் மற்றும் நல்ல மனம் உடையவர்”, என நெருங்கியவர்களால் தெரிவிக்கப்பட்டது.
அவர் மிகவும் அடக்கமானவர் மற்றும் பாலிவுட்டில் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் எனவும், அவரின் இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கான இறங்கல் செய்தி வெளியிட்டுவருகிறார்கள்.
பிரதமர் மோடி இறங்கல்
இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” இவரின் இறப்பு சினிமாவிற்கும், நாடகத்துறைக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பு ஆகும். அவர் பல்வேறு துறையில் இருந்த நடிப்பாற்றலால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன், அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்”, என தெரிவித்தார்.
விருது பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர்
இவர், “ஸ்லம் டாக் மில்லியனெயர்(slum dog millionaire)”, “லைப் ஆப் பை(life of pi)”, மற்றும் “ஜுராஸிக் பார்க்(jurasic park)” போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.