கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது கடந்த 24 மணி நேரத்தில் புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 2644 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் உள்ளது
இந்தியா: கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 எனப்படும் பெருந்தொற்று முதன் முதலில் சீனாவில் துவங்கி இன்று உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது இந்தியாவிலும்
இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மத்திய மாநில அரசுகளும் நோயினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன
[1:27 pm, 03/05/2020] Amar’s Silk Palace: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பலி எண்ணிக்கை 83 ஆகியுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39980-ஆக உள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 10,600 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் கடைகள் மற்றும் தொழிற்ச்சாலைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் மட்டும் நாட்டில் அதிகபட்சமாக இதுவரை 12,296 நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொற்றுகளின் 5,054 ஆகவும் இறப்புகளின் எண்ணிக்கை 262 ஆகவும் உள்ளது. ICMR இதுவரை 1000000 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மற்ற மாநிலங்களான டெல்லியில் 4,122, தமிழ்நாட்டில் 2,757, ராஜஸ்தானில் 2,770, மத்திய பிரதேசத்தில் 2,846, மற்றும் தெலுங்கானாவில் 1,063 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
உலகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டுமே 11 லட்சம் தொற்றுகள் இதுவரை உறுதியாகியுள்ளன.