மேற்குவங்கம்/ஒடிசா: இதுவரை 72 பேர் அதிதீவிர ‘ஆம்பன்’ புயலால் மரணமடைந்துள்ளனர் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெ
ரிவித்தார். ஆம்பன் புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2.5 இலட்சம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஒடிசாவையும் விட்டுவைக்காத ஆம்பன் புயல்
ஒடிசா மாநிலத்திலும் ஆம்பன் புயல் பயிர்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக பட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என ரிவிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சகத்திலிருந்து ஒரு குழு புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்ள்ளது.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஆம்பன் புயலால் அதிகம் பாதிப்படைந்த மேற்கு வங்கத்திற்கு வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார்
நாளை ஆம்பன் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் இருந்தபடி பார்வை இடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
45 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒடிசாவில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சுந்தரவனக்காடுகளில் கரையை கடந்த அதி தீவிர ஆம்பன் புயல் அங்குள்ள மரங்களை சின்னா பின்னம் ஆக்கியுள்ளதாக தெரிகிறது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குனர் எஸ்.எண். பிரதான், ஒடிசாவில் இன்னும் 24 முதல் 48 மணி நேரங்களில் இயல்பு நிலை திரும்ப வாய்புள்ளது என தெரிவித்தார்.