100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய கேப்டன் தோனி, நாடே 21 நாள் ஊரடங்கில் உள்ள நிலையில் தினக்கூலியாக வறுமையில் இருப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவினார் தோனி.
புனே பகுதியில் தினக்கூலியாக இருக்கும் 100 ஏழைக்குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
இதை தோனி கேட்டோ என்னும் இணையத்தின் மூலம் புனேவில் இருக்கும் முகுல் மாதவ் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது மிகப்பெரிய தொகையாக இல்ல்லாவிட்டாலும் வறுமையில் உணவு அத்தியாவசிய பொருளின்றி தவிப்போருக்கு உதவியாக அமையும்.
டோனி மட்டுமின்றி பிற பிரபலங்களும் வறுமையில் வாடுவோருக்கு முடிந்த உதவி செய்து வருகின்றனர். இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் 4000 மாஸ்க் தானம் செய்துள்ளார்.
மேலும் இந்த 21 நாளில் அரசாங்கமும் வருமானம் இன்றி தவிப்போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டு தான் இருக்கிறது.