பிரபல நகைக்கடை ஜாய்ஆலுக்காஸ் இன் உரிமையாளர் துபாயில் தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதை அடுத்து அவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் மற்றொரு தொழில்அதிபரான ஜாய் அரக்கல் என தெரியவந்துள்ளது.
இவர் இன்னோவா சுத்திகரிப்பு மற்றும் வணிகம் என்ற நிறுவனத்தின் இயக்குனர் எனவும், இவர் இந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழிலில் கடந்த 20 வருடங்களாக உள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த மனந்தாவடி என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். இவருக்கு சொந்தமாக 25 ஏக்கர் பரப்பளவு உடைய ‘அரக்கல் அரண்மனை’ கேரளாவில் உள்ளது.
“இந்த ‘ஜாய் அரக்கல்’ என்பவர் ஏப்ரல் 23இல் துபாயில் தான் இருந்த கட்டிடத்தின் 14வது தளத்திலிருந்து கடன் பிரச்சனை காரணமாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்”, என துபாய் காவல் துறை தெரிவித்தது.
இவரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான மனந்தாவடிக்கு எடுத்துவரப்பட உள்ளது.
இவரின் பெயர் ஜாய் என்று ஆரம்பம் ஆகிறது, இதனால் பிரபல நகைக்கடையின் அதிபர் என்ற தவரான செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.