புதுடெல்லி: lockdown exemption: கோவிட்-19 தொற்றை தவிர்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சில துறைகளுக்கு மத்திய அரசு ஏப்ரல் 20 முதல் ஊரடங்கிலிருந்து விலக்கு (lockdown exemption) அளித்துள்ளது.
மின் சாதன பணியாளர்கள், குழாய் பழுது பார்ப்பவர்கள் போன்ற அத்தியாவசிய துறைகள் மற்றும் சேவைகளைச் சார்ந்தவர்கள் முகக்கவசம் அணிதல் போன்ற தகுந்த பாதுகாப்போடு இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், ஏகே பல்லாஸ் இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சார்ந்த அதிகாரிகளால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளோடு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை ஏப்ரல் 20-க்கு பிறகு அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் சில அரசியல் தலைவர்கள் இவ்வாறு விதிவிலக்கு அளிப்பதனால் கோவிட்-19 தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் தெரிவித்து உள்ளனர்.