மும்பை: சிறைக் கைதிகளை அவசரமாக சிறையிலிருந்து பரோலில் அல்லது பெயிலில் விட மராட்டியத்தில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. திங்கட்கிழமை இக்குழு மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 17,000 சிறைக்கைதிகளை விடுவிக்க முடிவெடுத்து உள்ளது. இது மராட்டியத்தில் உள்ள மொத்த 35,239 கைதிகளின் எண்ணிகையில் பாதியாகும்.
சிறையிலும் பரவும் கொரோனா
மும்பை ஆர்தூர் சாலை சிறைச்சாலையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது. ஆர்த்தூர் சாலையில் மொத்தம் 185 கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது மற்றும் மும்மையில் பைகுல்லாவில் உள்ள மகளிர் சிறையிலும் கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது மற்றும் கைதிகள் அதிகம் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
பரோலில் அல்லது பெயிலில் விடுவிக்க முடிவு
உயர்மட்ட குழு மேலும் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள அறிவிப்பில் “ எந்த வகையான சிறை கைதிகள் பரோலில் அல்லது பெயிலில் விடுவிக்கப்படுவார்கள் என்பதை உயர்மட்ட குழுவில் உள்ளவர்கள் கைதிகளின் குற்றத்தின் தன்மையை பொருத்து முடிவெடுப்பார்கள்” என தெரிவித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 13ன்றில் தனது உத்தரவில் தெரிவிக்கையில் “சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா பரவலால் ஏற்பட்டிருக்கும் சூழல் காரணமாக, குறிப்பிட்ட சிறைக்கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சி தனது கட்சிக்கு ஆதராவான குண்டர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சில பேர் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்துகள் தெரிவித்துள்ளனர்.