Home நிகழ்வுகள் இந்தியா கனிகா கபூர் முதல் குடியரசு தலைவர் வரை – கொரோனா பரவிய வரைபடம்

கனிகா கபூர் முதல் குடியரசு தலைவர் வரை – கொரோனா பரவிய வரைபடம்

709
0

கனிகா கபூர் முதல் குடியரசு தலைவர் வரை எப்படி கொரோனா ஜெயின் லிங்க் கணக்கிடப்பட்டது என்பதற்கான வரைபடம். கொரோனா பரவிய வரைபடம் kanika kapoor corona tree map.

லண்டன் பயணம்

கடந்த வாரம் கனிகா கபூர் லண்டன் சென்று உள்ளார். அங்கு இருந்து மார்ச் 9-ம் தேதி விமானம் மூலம் மும்பை வந்தவர் கொரோனா பரிசோதனை செய்யாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

மக்கள் கூட்டம் கூடும் என விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பாத்ரூமிற்கு சென்று உள்ளார். அங்கு இருந்த ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளாமல் பிரபலம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி தப்பி உள்ளார்.

லக்னோ பார்ட்டி

மும்பையில் இருந்து விமானம் மூலம் லக்னோ சென்றுள்ளார். இந்த முறை உள்ளூர் பயணம் என்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.

மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் லக்னோவில் பல்வேறு பார்டிகளில் கலந்துகொண்டு உள்ளார். அதில் ஒன்று வசுந்தரா ராஜே கொடுத்த விருந்து நிகழ்ச்சியும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் வசுந்தராவின் கன்னத்தை உரசியபடி புகைப்படம் கூட எடுத்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து அடுத்த நாள் மார்ச் 16-ல் கனிகாவிற்கு கொரோனா வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.

மருத்துவப் பரிசோதனை

மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டதில் இரண்டு நாட்களுக்கு முன் ரிசல்ட் வெளியாகியது. அதில் கனிகாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனிகா கலந்துகொண்ட பார்ட்டியில் வந்திருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இதில் வசுந்தரா ராஜே மற்றும் அவரது மகன் துஷ்யந்த் சிங்கிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

அதிஷ்ட வசமாக எனக்கும் என் மகனுக்கும் கொரோனா தொற்று பரவில்லை என வசுந்தரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதேபோல் குடியரசுத்தலைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கொரோனா தோற்று உள்ளதா என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும் வசுந்தராவிற்கும், அவரது மகனுக்கும் தொற்று இல்லை என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தொற்று பரவியிருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

கனிகா கபூர் மூலம் கொரோனா பரவிய வரைபடம்

Previous articleரணகளத்திலும் குதூகலம்:ஸ்ரேயாவின் பால்கனி டான்ஸ்!
Next articleகனடா பிரதமர் மனைவியா இவங்க? அதிர்ச்சியடைந்த உலகம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here