மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையப் பாலம் இடிந்து 4 பேர் பலி
ரயில் போக்குவரத்து மும்பையின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டால் மும்பையே ஸ்தம்பித்துவிடும்.
மும்பையின் அனைத்து ரயில் நிலையங்களுமே எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கும்.
மும்பை நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். நேற்று மாலை 8 மணியளவில் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது.
முதலாம் நடைமேடையில் இருந்து ரயில் நிலையத்திற்கு வெளியே செல்லும் பாலம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி 20-ற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த பாலம் வெளியில் உள்ள சாலையிலும் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.