புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகளை கண்டுபிடித்து சுட்டுக்கொன்றது ராணுவம்: முழுநீள வீடியோ
புல்வாமா தாக்குதல் நடந்ததாக வெளியான வீடியோவை முதலில் பார்க்கவும்: பதிலடி கொடுத்த வீடியோ கடைசியாக இணைக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஸ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்பு, சிஆர்பிஎப் வீரர்கள் சென்றபோது, தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு ஆளானார்கள்
இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தாக்குதல் நடந்த வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ போலி என ராணுவம் தெரிவித்துள்ளது.
இதை அடுத்து, புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காஷ்மீர் மாநில போலீசார், 55 ராஷ்ட்ரிய ராணுவ ரைஃபிள் பிரிவினரும் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தனர்.
இறுதியாக, ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இருவரில் கம்ரான் என்ற நபர் ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பின் முக்கிய கமாண்டரும், மசூத் ஆசாரின் நெருங்கிய கூட்டாளியுமாவார்.
ஹிலால் அகமது, கம்ரான் ஆகிய இருவரும் தான் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஜீநியூஸ் வெளியிட்டுள்ளது.