வெள்ளை வேஷ்டி, சட்டை, துண்டு: கோவிந்தா போட்ட ராகுல்காந்தி
இத்தனை வருடம் எந்த திசையில் இருந்தனர் என்றுகூட சில தலவைர்களைப் பற்றி தெரியாமல் இருக்கும்.
ஆனால், தேர்தல் வந்தால்போதும் தலைவர்களின் குணங்கள் முற்றிலும் மாறிவிடும். வீடு வீடாகச் சென்று காலில் விழுந்துகூட ஓட்டுச்சேகரிப்பார்கள்.
இதில் எந்தக்கட்சித் தலைவர்களும் விதிவிலக்கு அல்ல. தற்பொழுது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதிக்குச் சென்று கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
வழக்கமாகச் செல்வது போன்று இல்லாமல், ஆந்திரா ஸ்டைலில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்து சென்றுள்ளார்.
வேட்டியை யாரவது புதிதாகக் கட்டினால் நடப்பதற்கு சிரமப்படுவார்கள். அந்த அவஸ்தையை ராகுல் அனுபவித்துள்ளார்.
காலை கிந்தி கிந்தி நடப்பதும், வேட்டியை தூக்கிப்பிடித்தும் நடந்துள்ளார். இதைக் கிண்டல் செய்து பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்துக்களின் பாரம்பரிய உடையக்கூட ராகுல்காந்தியால் அணியமுடியவில்லை. இவர், எப்படி நாட்டைக் காப்பாற்றுவார் எனக் கேலி செய்துள்ளனர்.
ராகுல் காந்தியின் கோவிந்தா கோஷம் காங்கிரஸ் கட்சிகா? பாஜக கட்சிக்கா? எனவும் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கும் விவாதம் நடந்து வருகிறது.