மே-29 வரை ஊரடங்கு நீட்டிப்பு. தெலுங்கானா அரசு, மத்திய அரசு அறிவித்த மூன்றாம் கட்ட ஊரடங்கை தெலுங்கானாவில் மே 29 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
தெலுங்கானா: கொரோனா வைரசின் பரவலை கட்டுக்குள் வைக்க கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கை மத்திய அரசு மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இது 3-ம் கட்ட ஊரடங்கு ஆகும்.
இந்த 3-ம் கட்ட ஊரடங்கு 12 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மே 29 வரை நீட்டித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
நேற்று மாலை 7 மணியளவில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிகப்பட்டபின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தெலங்கானா முதல்வர், “ஊரடங்கை நீட்டிப்பதை மக்கள் விரும்புகின்றனர்.
இந்த நீட்டிப்பு குறித்த அறிக்கை பரமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த மாநிலத்தில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன.
9 மாவட்டங்களில் பச்சை மாவட்டங்களாகவும், 18 மாவட்டங்களில் ஆரஞ்சு மாவட்டங்களாகவும் உள்ளன. 3 மாவட்டங்களில் தீவிர பாதிப்பு பகுதிகளாக உள்ளன.
இந்நிலையில், சிவப்பு மண்டலங்களில் கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் தெலுங்கானாவில் ஹைதராபாத், மொத்சால், சூர்யாபேட், விகிராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை.
தெலுங்கானாவில் 1,096 பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 628 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
தெலுங்கானாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 1,085 பேரில் 717 பேர் (66.08%) இந்த 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பிற்கு முன்னரே இம்மாநிலத்தில் மே 7 வரை ஊரடங்கு நீட்டித்தது.