அசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கர்பிணி யானை கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்தே நாடு இன்னும் மீளவில்லை. மீண்டும் ஒரு கொடூரம் அசாமில் நிகழ்ந்துள்ளது.
அசாம்: கேரளாவில் பசிக்காக உணவு தேடிய கர்பிணி யானை ஒன்று அன்னாசிபழத்தில் வெடி வைத்து உணவு உண்ணமுடியாமல் இறந்துபோனது.
இதனை அடுத்து இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜன்துட்டா பகுதியில், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு பந்தை உண்ட மாடு வாய் வெடித்து சிதைந்தது.
இந்நிலையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் சிறுத்தை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது. கவுஹாத்தி, காதப்ரி கிராமத்தில் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம்.
அவ்வாறு ஊருக்குள் வரும் சிறுத்தை ஒன்றை பிடிப்பதற்காக சோய்லாம் போடோ என்பவர் வலையை விரித்துள்ளார். அதில் சிறுத்தை மாட்டிக்கொண்டுள்ளதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
மக்கள் அதிகம் பேர் கூடிவிட பயந்துபோன சிறுத்தை வலையிலிருந்து வெளியேறி ஊருக்குள்ள ஓடியுள்ளது. அதனை துரத்தி பிடிக்க ஊர் மக்கள் ஓடியுள்ளார்.
அப்போது எதிரே வந்த 7 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனால் மக்கள் கைகளில் கிடைத்தவற்றை தூக்கி சிறுத்தை மீது வீசியுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்துள்ளது.
அதன் பின்னர் சிறுத்தையின் கண்கள், நகங்கள், பற்கள் ஆகியவற்றை பிடுங்கி அதன் உடலை சுமந்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வலுத்துள்ளது.