சென்னை: மதுரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை விரிவுபடுத்தி, பரவை நகர பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் மதுரை கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்கள், மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் செவ்வாய் கிழமை(இன்று) முதல் இந்த மாத இறுதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தியது தமிழக அரசு.
தமிழகத்தில் ஒரே நாளில் 2710 புதிய கொரோனா தொற்றுகள்
ஒரே நாளில் 2710 புதிய கொரோனா தொற்றுகள் தமிழகத்தில் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த வெள்ளிக் கிழமை சென்னை உட்பட அதனை சுற்றிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருக்கிறது.
6 நாட்களாக தொடர்ந்து 2000 மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள்
தமிழகத்தில் 6 நாட்களாக தொடர்ந்து 2000 மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் ஒவ்வொரு நாளும் உறுதியானது.
தமிழகத்தில் 37 புதிய கொரோனா உயிரிழப்புகள் திங்கள் அன்று பதிவானதை தொடர்ந்து இதுவரை 34,112 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திங்கள் அன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்தனர்.
சென்னையில் ஞாயிறு மட்டும் 1487 கொரோனா தொற்றுகள்
தமிழகத்தில் சென்னை மிக மோசமாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ளது. இங்கு மட்டும் 42,752 கொரோனா தொற்று உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும்1487 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன.