Home நிகழ்வுகள் தமிழகம் கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி: கிடைத்த அதிசய பொருள்

கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி: கிடைத்த அதிசய பொருள்

393
0
கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி

கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி; செங்கல் கட்டுமானம் மற்றும் கிடைத்த அதிசய பொருள். இந்த குழவி கல் சாதாரணமாக இல்லாமல் அதிசயத்தக்க வகையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் குழாய் அமைக்க குழிகள் தோண்டும் பொழுது செங்கல் கட்டுமானங்கள் தென்பட்டது.

இதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், 5ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தரை தளத்தின் தொடர்ச்சி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த தொடர்ச்சியான தரைத்தளத்தில் 10 செ.மீ., நீளத்தில் சிறிய அளவிலான குழவி கல்லும், குவளை வடிவிலான பானை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது

நில உரிமையாளர் கதிரேசன் கூறியது

குழாய் பதிக்க குழி தோண்டும் பொழுது பெரிய செங்கல் கட்டுமானம் கிடைத்தது. அதன் பிறகு தோண்டாமல் அப்படியே அகழ்வாராய்ச்சியாளர்களிடம் தெரிவித்துவிட்டோம்.

தற்பொழுது எங்கள் நிலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. அதிசயத்தக்க பல அறிய பொருட்கள் என் நிலத்தில் இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது என கூறியுள்ளார்.

இதுவரை கீழடியில் பல அறிய வகை பொருட்கள் கிடைத்து உள்ளது. இருப்பினும் கீழடி நாகரீகமே உலகின் முதல் நாகரீகம் என்பதற்கு மேலும் வலுசேர்க்கும் ஆதாரம் ஒன்றிற்காக தமிழகமே காத்துகொண்டு உள்ளது.

அப்படி கிடைக்கும் பொருள் அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் உனடியாக அதன் வயதைக் கணித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் எனபதே உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனின் ஆசையும் கூட.

Previous articleராகுல் காந்தி; கொரோனாவை குறைத்து எண்ணுகிறார்கள்
Next articleகொரோனா பாதிப்பு; இன்றிரவு பேச தயாராகும் பிரதமர் மோடி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here