Home நிகழ்வுகள் தமிழகம் மகள் கண் முன் ரவுடி கொலை, வெட்டிய தலையுடன் சரணடைந்த கொடூரம்

மகள் கண் முன் ரவுடி கொலை, வெட்டிய தலையுடன் சரணடைந்த கொடூரம்

408
0
மகள் கண் முன் ரவுடி கொலை

திருச்சி: திருவரங்கம், பிரபல ரவுடி மூன்று பேரால், மகள் கண் முன் தலை வெட்டப்பட்டு கொலை செய்ப்பட்டான். கொலையாளிகள் காவல் நிலையத்தில் ரவுடியின் தலையுடன் சென்று சரண் அடைந்தனர்.

கொலை செயப்பட்டவன் சந்திர மோகன் என்கிற தலைவெட்டி சந்துரு, வயது 38 திருவரங்கத்தில் உள்ள டிரைனேஜ் தெருவில் வசித்து வந்தவர், என்பதும் இவர் பல கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் மகளுடன் தேவி தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார் ரவுடி சந்துரு. அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சந்துருவை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களைகொண்டு தாக்கினர். சந்துருவின் மகளை ஒன்றும் செய்யாமல் விட்டனர்.

பிறகு சந்துருவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துகொண்டு திருவரங்கம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தனர்.

அந்த கொலைகாரர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு இருந்த ரவுடி சந்துருவின் மீதி உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த கொலைக்கான காரணத்தை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here