மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆக்குவது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி மருத்துவக்கல்லூரி விழாவில் பேசியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை நகரை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க இங்குள்ள மக்கள் விரும்புகின்றீர்கள்.
தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்யும். என மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது, ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயிலும் வகையில் ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது.
இங்கு ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு தொழிற்சாலைகளுக்கும் இனி அனுமதி இல்லை. விவசாயிகளுக்கு மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.