Home நிகழ்வுகள் தமிழகம் வைரலாகும் கேரம் போர்ட் சிறுவன் வேடிக்கையும் விழிப்புணர்வும்

வைரலாகும் கேரம் போர்ட் சிறுவன் வேடிக்கையும் விழிப்புணர்வும்

0
350
Tirupur carrom borad viral video

வைரலாகும் கேரம் போர்ட் சிறுவன் வேடிக்கையும் விழிப்புணர்வும், Tirupur carrom borad viral video, திருப்பூர் போலீசாரிடம் கேரம் போர்ட் விளையாடி சிக்கிய சிறுவர்கள்.

டிரோன் மூலம் அவர்களை கதறவிட்ட போலீஸ். ஒரு பக்கம் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் விழிப்புணர்வாக அமைகிறது.

இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் இருக்கிறது. இதனால் வீட்டினுள் முடங்கியே இருக்க முடியாமல் சிறுவர்கள் விளையாட சென்று விடுகின்றனர்.

திருப்பூரில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியில் சிறுவர்கள் ஒன்றிணைந்து கேரம் விளையாடியது தெரிந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலம் ஓட ஓட விரட்டினர்.

இவ்வாறு போலீஸிடம் சிக்கியவர்களை டிரோனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கிய திருப்பூர் போலீஸ்.

அதில் ஒரு சிறுவன் கேரம் போர்டை தூக்கிக் கொண்டு ஓட, சற்று தூரம் சென்று அதன் பின்னால் மறைந்து கொண்டான். பின் விட்டால் போதும் என போர்டை தூக்கி எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடினான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here