தமிழகத்தில் கொரோனா; திருச்சியில் நான்கு பேர் சிறப்பு வார்டில் அனுமதி
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதைக் கட்டுக்கொள் கொண்டுவர ஒவ்வொரு மாநிலங்களும் சிறப்பு வார்டுகளை ஏற்பாடு செய்து முன் எச்சரிக்கையோடு செயல்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா
நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஒரு குழந்தையுடன் மூவருக்கு 100டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்ததால் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களை சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து ரத்த மாதிரிகளை டெஸ்ட்க்கு அனுப்பியுள்ளனர்.
கேரளாவில் இருந்த 3 கொரோனா பேசண்ட் சேர்த்து மொத்தம் 29 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் என ஹெல்த் மினிஸ்டர் தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு வந்த இத்தாலியன் பயணிகளில் 21இல் 14பேருக்கு கொரொனா வைரஸ் ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளதாம். அதில் இந்திய டிரைவரும் ஒருவர் ஆவார்.
தெலுங்கானாவில் ஒருவரும் ஆக்ராவில் ஆறு பேரும் மொத்தம் 28 நபர்களுக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.