Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என அரசு அறிவித்துள்ள பட்டியல்

கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என அரசு அறிவித்துள்ள பட்டியல்

கொரோனா பரவலை தடுக்க

புதுடெல்லி/சென்னை:கொரோனா பரவலை தடுக்க செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என அரசு அறிவித்துள்ள பட்டியல் பின்வருமாறு.

செய்யவேண்டியது:

  • மூக்கு மற்றும் வாயை ஒருமுறை பயண்படுத்தக்கூடிய கைக்குட்டை அல்லது துணியால் செய்த கைக்குட்டையை கொண்டு மூடிக்கொள்வது.
  • சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கையை சுத்தமாக கழுவுதல்.
  • கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருத்தல்.
  • சளி, தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டில் தனிமையில் இருத்தல்.
  • சளி, தும்மல், காய்ச்சல் உள்ளவர்களை விட்டு ஒரு கை நீள அளவை விட அதிக தூர விலகலை கடைபிடித்தல்.
  • சரியான அளவில் தூக்கம் மற்றும் ஓய்வு எடுத்தல்.
  • அதிக அளவில் நீர் ஆகாரம் மற்றும் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல்.
  • காய்சல் போன்ற அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அனுகுதல்.

செய்யக்கூடாதது:

  • இரும்பல் மற்றும் தும்மலுக்கு பின் கழுவாத கைகளால் மூக்கு, வாய் அல்லது கண் போன்ற பகுதிகளை தொடுதல்.
  • வரவேற்கும் பொழுது கட்டிபிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கை குலுக்குதல் போன்ற செயல்களை செய்தல்.
  • பொது இடத்தில் எச்சில் துப்புதல்.
  • மருத்துவரை ஆலோசிக்காமல் மருத்துகளை உட்கொள்ளுதல்.
  • திறந்த இடங்களில் பயண்படுத்தப்பட்ட நாப்கின்ஸ் அல்லது ஒருமுறை பயண்படுத்தும் கைக்குட்டை போன்றவற்றை தூக்கிஎறிதல்.
  • பொதுஇடத்தில் மக்கள் அதிகம் பயண்படுத்தும் பகுதிகளை தொடுதல்(கதவுகள், கைப்பிடிகள்,..)
Previous articleசாத்தான்குளம் சம்பவம்: டெல்லி மனித உரிமைகள் ஆணையத்தில் சனம் ஷெட்டி புகார்!
Next articleஇசையமைப்பாளர் GVPrakash சைந்தவி திருமண நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here