Home Latest News Tamil கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: சுகாதார அதிகாரிகள்

கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: சுகாதார அதிகாரிகள்

கோவை கொரோனா

கோவை: கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் திங்கள் கிழமை தெரிவித்தனர். பெரும்பாளும் அறிகுறி அற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பாதிப்பாளர்களை கொடிசியா கொரோனா மையத்திற்கு மாற்றினர்

அதிகாரிகள் கொரோனா பாதிப்பாளர்களை கொடிசியா கோவிட் பாதுகாப்பு மையத்திற்கு திங்கட்கிழமை மாலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இந்த கொரோனா மையத்திற்கு அழைத்து செல்லப்படும் முதல் கொரோனா பாதிப்பாளர்கள் குழுவாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 350 கொரோனா நோயாளிகள் சிகிச்சை

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 350 கொரோனா நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உக்கடத்தில் உள்ள ஒரு பேருந்து ஓட்டுநருக்கு கொரோனா

உக்கடத்தில் உள்ள ஒரு பேருந்து ஓட்டுநருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

Previous articleஇந்தியாவின் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
Next articleதமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: சிம்ரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here