திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 35ந்து வயதுடைய இளநிலை உதவியாளருக்கு கொரோனா இருப்பது செவ்வாய் கிழமை உறுதியானது.
பாரதிதாசன் சாலையில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரிபவர்
பாரதிதாசன் சாலையில் உள்ள பிரதான அலுவலகத்தில் இவர் வேலை செய்து வந்துள்ளார். பொதுப்பிரிவில் வேலை செய்யும் 15 வேலையாட்களில் இவரும் ஒருவர்.
இதற்கு முன் சக ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா
இந்த அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது நபர் இந்த பெண்மணி ஆவார். இவருக்கு எந்த பயண வரலாறுகளும் இல்லை. இதற்கு முன் சக ஊழியர்கள் இரண்டு ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சக உழியர்கள் தங்களது துரையை தற்காலிகமாக மூடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே கிருமினாசினிகள் மூலம் அவ்விடம் சுத்தமாக்கப்பட்டது என தெரிவித்தனர்.