Home Latest News Tamil தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50,000 த்தை கடந்தது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50,000 த்தை கடந்தது

கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை: புதன்கிழமை தமிழ்நாட்டில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்தனர் மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை 50,000 த்தை கடந்து 50,193 ஆக உள்ளது.

இன்று மட்டும் 2,174 கொரோனா தொற்றுகள்

இன்று மட்டும் 2,174 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது.மொத்த கொரோனா இறப்பின் எண்ணிக்கை 576 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 1,276 தொற்றுகள்

சென்னையில் மட்டும் 1,276 தொற்றுகள் உறுதி. செங்கள்பட்டில் 162 தொற்றுகளும், காஞ்சிபுரத்தில் 61 தொற்றுகள் மற்றும் திருவள்ளூரில் 90 புதிய தொற்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அரியலூர், ஈரோடு, பெரம்பலூர் மற்றும் திருப்பூர் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்றுகள் உறுதி.

தமிழ்நாட்டிற்கு திரும்பிய 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்தும், 3 பேர் சிங்கப்பூரில் இருந்தும், மலேசியா மற்றும் குவைதிலிருந்து வந்த தலா இருவருக்கும் கொரோனா உறுதி.

வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 27,624 பேர் குணமடைந்துள்ளனர்

இன்றைய நாள் முடிவில் 842 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 21,990 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 27,624 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here